தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க..! சென்னை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

தான் செய்த செயலுக்கு மனம் வருந்தி தற்போது பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூ ட்விட்டரில் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர் ராஜூ ஜெயமோகன். இவருக்கு ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த தொடர் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். இதன் பின்னர் இவர் ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். மேலும் கவின் உடன் இணைந்து நட்புனா என்னனு தெரியுமா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு கிடைத்த புகழை கொண்டு இவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். அந்த சீசனின் வெற்றியாளராகவும் இருந்தார்.

விளம்பரம்

வெளியே வந்த பின்பு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ராஜூ வூட்ல பார்ட்டி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை இவர் பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இவரின் பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரோமோஷன்காக நாகார்ஜுனா, ராஜமவுலி, ரன்பீர் கபூர் ஆகியோர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அங்கு ரன்பீர் கபூரிடம் தமிழ் சொல்லித் தருவதாக ராஜூ கூறிய சில வார்த்தைகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ரன்பீர் கபூரிடம் தமிழகத்தில் எப்படி தமிழ் பேசுவார்கள் என்று செய்து காட்டினார் ராஜூ, மேலும் அதை ரன்பீர் கபூரையும் செய்யச் சொன்னார்.

விளம்பரம்

விளம்பரம்

சென்னையில் உள்ளவர்கள் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்துக் கொண்டே எரிச்சலாகவே இருப்பார்கள் என்று கூறினார். மதுரையில் உள்ளவர்கள் பேசுவது போல் செய்து காட்டும் போது குடித்துவிட்டு பேசுவது போலவே பேசினார். இதை ரன்பீர் கபூரும் அப்படியே திருப்பி செய்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் உன் ஊருக்கு வந்த ஒருவரிடம், உன் ஊரின் கலாச்சாரத்தை இப்படித்தான் சொல்லிக் கொடுப்பாயா? சென்னைக்கு நீயே பிழைக்க வந்துவிட்டு சென்னை மக்களை இப்படித்தான் அசிங்கப்படுத்துவாயா? என்று கோபத்தில் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கம் அளித்து ட்விட்டரில் டிவீட் ஒன்றை போட்டு இருக்கிறார் ராஜு.

விளம்பரம்

சென்னைக்கு வந்த ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக் கொடுத்த காணொளியை சிலர் சென்னை மக்களை இழிவாக பேசினேன் என்று விமர்சனம் செய்து எழுதுகின்றனர். நகைச்சுவையாக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன். இரிடேட் ஆக வேண்டாம் மன்னிக்கவும் என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடையவை  காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டது உண்மைதான்!! நீரிழுவு நோயால் மருத்துவர்கள் ஆலோசனையில் சிகிச்சை செயப்பட்டது!! தே.மு.தி.க தலைமை அறிக்கை வெளியீடு!!

தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க..! சென்னை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு 1

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment