Categories: சினிமா

ஆமா அந்த பாட்டை முதல்ல நான்தான் பாடுனேன்..! ஆனா..உண்மைகளை போட்டு உடைத்த ராஜலக்ஷ்மி

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை கிளப்பி வந்த ஒரு செய்தி தான் அதிதி ராஜலக்ஷ்மி பிரச்சனை. அதிதி இயக்குனர் சங்கரின் மகள் ஆவார். இவர் முதன்முதலாக நடித்துள்ள படம் விருமனாகும். இந்த படத்தில் மதுரவீரன் என்ற படத்தை பாடலை இவர் பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடல் குறித்து தான் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. முதலில் இந்த பாடலை பாடியவர் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான். ஆனால் அவர் பாடியதை நீக்கிவிட்டு இயக்குனர் சங்கரின் மகளை பாட வைத்துள்ளது படக் குழு. இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதிதியையும் படக்குழுவையும் திட்டி தீர்த்து விட்டனர். நெப்போடிசம் என்றும், இயக்குனர் சங்கரின் மகள் என்பதற்காகவே இவ்வளவு சலுகை காட்டுகிறீர்களா என்றும் திட்டி தீர்த்து விட்டனர்.

ஆமா அந்த பாட்டை முதல்ல நான்தான் பாடுனேன்..! ஆனா..உண்மைகளை போட்டு உடைத்த ராஜலக்ஷ்மி 1

இந்த நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து அறிவதற்காக ராஜலட்சுமி இடம் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றை எடுத்துள்ளது. அதில் பேசிய அவர் இந்த தகவலை ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் இந்த பாடலை பாடியது தான் எனவும், பின்னர் இந்த பாடலை அதிதியை வைத்து பாடியுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் இதனால் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை, எனது குரல் கதைக்கு செட்டாகாமல் போய் இருக்கலாம், எனவேதான் அதிதியை பாட வைத்திருப்பார்கள் என்றும் எனக்காக அதிதியை திட்டுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் ராஜலட்சுமி பேசினார். மேலும் உங்களிடம் பாட்டை நீக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டதா என்று ராஜலட்சுமியிடம் கேட்கப்பட்டது. அது பற்றி பேசியவர், இல்லை நான் அது குறித்து கேட்கவும் இல்லை, எனது வேலை அதுவும் இல்லை, பாடுவது மட்டுமே எனது வேலை, பலரின் குரல்களை பாட வைத்துவிட்டு கேட்ட பின்பு இறுதியாக படக்குழு முடிவு செய்திருக்கலாம் எனவே அது குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை் அதனால் தனக்கு வருத்தமும் இல்லை என்று பேசி இருந்தார்.

மேலும் தன்னை பாட வைக்க வேண்டும் என்று அவர்கள் சிந்தித்ததே தனக்கு பெரிய விஷயம் என்றும், சாரி எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை எனக்கு ஏன் அவர்கள் சாரி கேட்க வேண்டும்? அவர்கள் மனதில் இப்படி ஒரு பாட்டிற்கு ராஜியை தேர்வு செய்ய தோன்றி இருப்பதற்காகவே மிகப்பெரிய தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அதிதி நன்றாக பாடுகிறார்கள், எனக்கு நியாயம் கேட்பதாக நினைத்துக் கொண்டு அதிதியை தொடர்ந்து விமர்சிக்க வேண்டாம் என்றும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை, யார் மீதும் கோபமும் இல்லை, பாடும் பொழுது எப்படி சந்தோஷமாக பாடினேனோ தற்போதும் அப்படியேதான் இருக்கிறேன். எனக்கு தற்போது பாட்டு கொடுக்க நினைக்கும் இசையமைப்பாளர்கள் கூட இந்த பொண்ணை கூப்பிட்டு பாட வைத்துவிட்டு நாளைக்கு வெளியாக விட்டால் தன் பெயர் கெட்டுவிடுமோ என்று நினைத்துக் கொள்வார்கள், அதுதான் மிக சங்கடமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்