ராஜா ராணி தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த பின்பு ராஜா ராணி ரசிகர்கள் சந்தியாவை திட்டி தீர்த்து வருகின்றனர். விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண், இனிப்புக் கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது மனைவி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசையை தெரிந்து கொள்கிறார். அதற்கு மாமியார் முட்டுக்கட்டையாக இருக்கிறார் இந்த தடைகள் அனைத்தையும் மீறி மனைவியை ஐபிஎஸ் ஆக்கினாரா? சந்தியா ஐபிஎஸ் ஆனாரா? அதற்கு அவரது மாமியார் ஒத்துக்கொண்டாரா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி. தற்போது பல தடைகளை மீறி ஐபிஎஸ் ட்ரைனிங் அனைத்தையும் முடித்து சந்தியா சொந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சீரியலில் இருந்து விலகுவதாக சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. ழ நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்திருந்தார் ரியா விஸ்வநாதன்.இது வதந்தி என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ரியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விலகல் குறித்து காரணம் எதுவும் கூறாமல் இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவும் அன்பும் கொடுத்து வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்றும், நான் சந்தியாவாக தனது 200 சதவீத உழைப்பை கொடுத்தேன், இப்பொழுது புது சந்தியா நடித்து வருகிறார். நீங்கள் அந்த புது சந்தியாவிற்கு உங்களது ஆதரவை கொடுங்கள். இனிமேல் நான் ராஜா ராணி சீரியல் இல்லை, அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று சொல்லி வீடியோவை வெளியிட்டு இருந்தார். நன்றாக நடித்து வந்த நிலையில் நீங்கள் விலகியது சரியில்லை என்று இதற்கு பலரும் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்தனர்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா புது சந்தியாவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சஷ்டி விரதம் என்பதால் சிவகாமி வீடு துடைத்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு தற்கொலை கேஸை முடித்துவிட்டு நேராக வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார் சந்தியா. அதை பார்த்த மாமியார் மீண்டும் வீட்டை துடைத்து விடும்படி கூறுகிறார். சந்தியாவும் வீட்டை மாப்பு போட்டு துடைத்து கொண்டிருக்க சந்தியாவுக்கு கீழ் பணி செய்யும் பெண் போலீஸார் அங்கு வருகிறார்கள். இந்த ப்ரோமோவை பார்த்த சில அந்த பூமர் கிழவிக்கு பயந்து பயந்து வேலை பார்க்கும் நீயெல்லாம் எதுக்கு ஐபிஎஸ் ஆன என்று சந்தியாவை வசைபாடி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below..!
Youtube Video Embed Code Credits: Vijay Television