சிவகாமி கொ லை செய்த நபரை யாருக்கும் தெரியாமல் எ ரி த் த சரவணன்.! என்ன இப்படி பண்ணிடீங்க??

வெளியிட்டது

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது் அதில் தனது தாய் சிவகாமி செய்த கொலையை மறைப்பதற்காக சரவணன் அந்த உடலை எடுத்துக்கொண்டு போய் காட்டுப்பகுதியில் வைத்து கொளுத்தி விடுகிறார். இதனால் சந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பது தெரியவில்லை. இந்த வழக்கில் யாரெல்லாம் மாட்டுவார்கள் என்பது தெரியவில்லை. சந்தியா சரவணனை கைது செய்வாரா? அல்லது சிவகாமியை கைது செய்வாரா? என்ற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிவகாமியின் மருமகளாக இருக்கும் சந்தியா பல தடைகளை மீறி தற்போது ஐபிஎஸ் ஆக பதவி ஏற்றிருக்கிறார். அவரது சொந்த ஊரான தென்காசிக்கு பதவி உயர்வு பெற்று சொந்த ஊரிலேயே வேலை பார்த்து வருகிறார் சந்தியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகாமி கொ லை செய்த நபரை யாருக்கும் தெரியாமல் எ ரி த் த சரவணன்.! என்ன இப்படி பண்ணிடீங்க?? 1
சந்தியா பொறுப்பேற்றது முதல் அவருக்கு பல தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. வீட்டிலும் வெளியிலும் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. வீட்டில் தனது கணவரின் சொந்த தம்பியே நகைகளை திருடுகிறார். அவரைக் கண்டுபிடித்து தற்போது போலீசில் ஒப்படைத்திருக்கிறார் சந்தியா. இந்த நிலையில் கதையில் அடுத்த திருப்பமாக சந்தியாவின் நாத்தனார் பார்வதியின் கணவர் ரவுடியால் கடத்தப்படுகிறார். மேலும் அந்த ரவுடி பார்வதியை வன்கொடுமை செய்யவும் முயற்சி செய்கிறார். இதனால் கடுப்பான சிவகாமி ஒரு உருட்டு கட்டையை எடுத்து அவரின் தலையில் ஓங்கி அடித்து அவரை கொலை செய்து விடுகிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிவகாமி தான் கொலை செய்த விஷயத்தை தனது மகனும், சந்தியாவின் கணவருமான சரவணனிடம் சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் உங்களுக்கு எதுவும் ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி சிவகாமி கொலை செய்த நபரின் உடலை எடுத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்கு செல்கிறார்.


அங்கே அந்த உடலை போட்டு எரித்து விடுகிறார் சரவணன். இதனால் சந்தியாவிற்கு என்ன நெருக்கடிகள் ஏற்படும் என்று தெரியவில்லை. உயர் அதிகாரி ஒருவர் சந்தியாவுக்கு இந்த கொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவு போடுகிறார். சம்பவ இடத்திற்கு வரும் சந்தியாவிற்கு சில தடயங்கள் கிடைக்கிறது. இதனால் கதை பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்