தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், இப்பொது நடிகர் ரஜினியும் படத்தை பார்த்து வியந்துபோயுள்ளார். நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ள ரஜினி லெட்டர் ஒன்றும் எழுதி படத்தை புகழ்ந்துள்ளார். அதில் ” அசாத்திய முயற்சியுடன் உலகசாதனை செய்துவிட்டாய் நண்பா பார்த்திபன், என பாராட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கேமராமேன் ஆர்தர் ஏ.வில்சன் இருவரையும் பாராட்டி புகழ்ந்து கடிதம் கொடுத்துள்ளார்.
