ஏஆர் ரகுமான் இயக்கிய படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் என்ன இப்படி படம் பண்ணி இருக்கீங்க என்று பாராட்டியுள்ள வீடியோவை ஏஆர் ரகுமான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் கோலொச்சி வரும் ரஜினிகாந்த்துக்கு இன்று 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ரஜினியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினியே தயாரித்து நடித்த பாபா திரைப்படம் மீண்டும் திரையில் வெளியிடப்பட்டது. சில பல மாற்றங்களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றம் பாடல்கள் மாற்றம் என்று மெருகேற்றங்கள் செய்யப்பட்டு இந்த படம் வெளியாகி இருந்தது.
ரஜினியின் புது படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பும் கிடைக்குமோ அந்த அளவிற்கு பாபா ரீ ரிலீஸ் படத்திற்கும் கிடைத்திருக்கிறது. ஏஆர் ரகுமான் இயக்கிய லீ மஸ்க் என்ற படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் என்ன சார் இப்படி படம் பண்ணி இருக்கீங்க என்று பாராட்டியுள்ள வீடியோவை ஏஆர் ரகுமான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை வெளியிட்டு உங்கள் அன்பான வார்த்தைக்கு நன்றி பிறந்தநாள் வாழ்த்துக்களை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்தியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.!