Categories: சினிமா

கோடி ரூபாய் கொட்டி குடுத்தாலும் பண்ண மாட்டேன்.! மக்கள் நலனை மட்டுமே சிந்தித்த ரஜினி.!

வெளியிட்டது

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தெரியாதவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலமானவர்தான். ரஜினிகாந்த் ஆரம்பத்தில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பெற்றோருக்கு தெரியாமல் சென்னைக்கு வந்து படத்தில் நடிப்பதற்காக பல இயக்குனர்களை அணுகியிருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் அவமானங்களை மட்டுமே சந்தித்த அவர் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் தமிழகத்தின் அசைக்க முடியாத நடிகராக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. அதற்காக அவர் கொடுத்த உழைப்பும், அவரின் இடைவிடாத முயற்சியும் தான் அவரை இன்றைக்கு எவ்வளவு பெரிய உயரத்தில் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கோடி ரூபாய் கொட்டி குடுத்தாலும் பண்ண மாட்டேன்.! மக்கள் நலனை மட்டுமே சிந்தித்த ரஜினி.! 1

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர்களை தெய்வங்களாக பாவிக்கும் சுபாவம் நிறைய பேர் இடத்தில் இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர்களை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கும் அவ்வளவு மதிப்பு உண்டு. தேர்தலில் கூட சில அரசியல் கட்சிகள் நடிகர்களின் ஆதரவை மறைமுகமாக பெறுவதற்கு முயற்சி செய்வார்கள். நடிகர்கள் சொன்னால் கேட்பதற்குஒரு மிகப்பெரிய கூட்டம் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. தற்போது பல நடிகர்களும் ஆன்லைன் சூதாட்டங்கள் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். உடல் நலத்தை கெடுக்கும் மதுபானங்கள் அல்லது உணவு விளம்பரங்களில் கூட நடித்து வருகின்றனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று வித்தியாசமானவர். இதுபோன்ற விளம்பரங்களில் ஒரு முறை கூட நடித்தது கிடையாது.

தனது ரசிகர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் படத்தில் மட்டுமல்லாது விளம்பரங்களில் கூட ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டு விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். அதனாலேயே முன்பு படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளின் நடித்த அவர் பின் நாட்களில் அது போன்ற காட்சிகளில் இனி நடிப்பதில்லை என்று அறிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் கண் தானம் செய்வது, சொட்டு மருந்து கொடுப்பது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதற்கு அவர் ஒரு ரூபாய் சம்பளம் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உடல் நலத்திற்கு கேடு தரும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், ரஜினிகாந்த் ஒரு நிஜமான சூப்பர் ஸ்டாராகவே ஜொலிக்கிறார்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்