திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சுக்கு வீல் சேரில் வந்த நித்யாமேனன்.! அவர்க்கு என்ன ஆனது தெரியுமா?

திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் நித்தியாமேனன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன ஆனது என்று அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம்தான் திருச்சிற்றம்பலம். நான்காவது முறையாக மித்ரன் ஜவஹருடன் இணைந்துள்ளார் தனுஷ். ஏற்கனவே குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் மித்ரன் ஜவகர் உடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக அவருடன் கைகோர்த்துள்ளதால் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சுக்கு வீல் சேரில் வந்த நித்யாமேனன்.! அவர்க்கு என்ன ஆனது தெரியுமா? 1

விளம்பரம்

இந்த படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் என்ற மூன்று கதாநாயகிகள் தனுசுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அனிருத் மற்றும் தனுஷின் காம்போ இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் எகிறி உள்ளது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நேற்று தேன்மொழி என்ற 4வதுபாடலும் வெளியாகி உள்ளது. இந்த நான்கு பாடல்களுமே படம் வெளியாவதற்கு முன்பே மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. ‘தாய்க்கிழவி’ என்ற குத்துப்பாட்டும், தனுஷின் குரலில் ‘மேகம் கருக்குதா’ என்ற பாடலும் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடையவை  நெற்றிக்கண் திரைபடத்தின் மூலம் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் !!

திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சுக்கு வீல் சேரில் வந்த நித்யாமேனன்.! அவர்க்கு என்ன ஆனது தெரியுமா? 3

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படத்தின் ஒரு கதாநாயகியான நித்யா மேனன் வீல்சேரில் வந்து கலந்து கொண்டுள்ளார். இதனால் அவருக்கு என்ன ஆனதோ என்று ரசிகர்கள் மிகவும் அதிர்க்கு உள்ளாகினர். சில நாட்களுக்கு முன்பு படிக்கட்டில் இருந்து விழுந்த போது கணுக்காலில் அடிபட்டதாகவும், அதனால் அவரால் சில காலமாக நடக்க முடியவில்லை என்றும், ஆடியோ வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முடியாத நிலையிலும் வீல்சேரில் வந்ததாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டதாக ட்விட்டரில் அவர் தெரிவித்திருந்த நிலையில் வீல்சேரில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்

Leave a Comment