Categories: சினிமா

“சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு.!” மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.!

வெளியிட்டது

மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு தற்போது அதன் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பரியேறும் பெருமாள் கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலமாக தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் மாரி செல்வராஜின் அடுத்த படமான மாமன்னன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

"சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு.!" மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.! 1

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி இருந்தது. வடிவேலு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என்று பலரும் அழுத்தமான கதாபாத்திரத்துடன் நடித்து இருந்த இந்த படம் வெற்றி படமாக மாறி இருக்கிறது. 45 கோடி வரை இந்த படம் வசூலை குவித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

 

மசாலா திரைப்படங்களின் வருகைக்கு முன்பு தமிழ் திரைப்படங்கள் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் திரைத் துறையை தங்களது சமூக நீதிக் கருத்துக்களை பரப்பும் களமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அதனால்தான் என்னவோ இன்றளவும் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. தற்போதெல்லாம் சமூக நீதியை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு பல இயக்குனர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாமன்னன் வழியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ படும் துன்பம் குறித்து அழுத்தமாக பேசி இருந்த “மாமன்னன்” படத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.


பலரும் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் வடிவேலு ஆகியோரின் நடிப்பை தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். அதற்கு முன்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ரஜினிகாந்த், “சமத்துவத்தை வலியுறுத்தும் மாறி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை ரீ ட்வீட் செய்த மாரி செல்வராஜ், “எனது முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும், கர்ணனையும் பார்த்து பாராட்டியதைப் போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் பிரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயத்தில் இருந்து நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாரி செல்வராஜ் பதில் ட்வீட் போட்டிருந்தார்.


தற்போது மாரி செல்வராஜ் சூப்பர் ஸ்டாரை சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆதி வருகிறது. பலரும் சூப்பர் ஸ்டாரின் இந்த செயலுக்காக அவரை வாழ்த்தி வருகின்றனர். எந்த ஒரு நல்ல படைப்பையும் மனதார பாராட்ட சூப்பர் ஸ்டார் என்றைக்குமே தவறுவதில்லை என்று அவரது ரசிகர்கள் கமெண்ட்களை கருத்துக்களாக தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்