மென்டலான், சங்கி, பூமர் அங்கிள், தேசிய கொடி ஏற்ற சொன்ன ரஜினியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்டு பலரும் அவரை கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றனர். நாளை நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை இதை முன்னிட்டு பிரதமர் மோடி ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதில் தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்பு பக்கத்தை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் கொடியேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை முன்னிட்டு பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கங்களை தேசியக்கொடி சின்னமாக மாற்றி வந்தனர். குறிப்பாக மலையாள மொழி பேசும் நடிகர்கள் மோடி சொன்ன உடனேயே மாற்றி இருந்தனர். ஆனால் தமிழ் நடிகர்கள் பலரும் தங்கள் முகப்பு பக்கத்தை மாற்றவில்லை, தங்கள் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வில்லை.

இது குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றினார் அவரை தொடர்ந்து நடிகர் விஜயும் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார் இவர்களைத் தவிர வேறு எந்த பிரபலமும் வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வில்லை பின்னர் ரஜினிகாந்த் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு இருந்தார் அதில் இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு, நம் நாட்டை வணங்கு விதமாக, நம் எல்லாருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருடங்கள் பல லட்சம் பேர் எவ்ளோ சித்திரவதைகள் கொடுமைகள் அனுபவித்து இருக்கிறார்கள், அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15ஆம் தேதி ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒரு சிறிய கொம்பில் நம் தேசியக்கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால் நம் வீட்டுக்கு முன்னால் அந்த கொடியை பறக்க விட்டு நாம் பெருமைப்படுவோம், “நாடு இல்லை என்று சொன்னால் நாம் இல்லை”, நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டு இருந்தார்.

மென்டலான், சங்கி, பூமர் அங்கிள், தேசிய கொடி ஏற்ற சொன்ன ரஜினியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசன்கள்.! 1

ஆனால் இதைப் பார்த்த பல நெட்டிசன்களும் இத்தனை வருடமாக உங்கள் வீட்டில் கொடியேற்றாத நீங்கள், இன்று மோடி சொன்ன பின்பு ஏற்றுவது ஏன்? என்றும், ரஜினிகாந்த் ஒரு சங்கீ, பூமர் அங்கிள் என்றும் சகட்டுமேனிக்கு ரஜினியை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஜிஎஸ்டி பத்தி பேசாத நீங்கள் இன்று தேசப்பற்று பற்றி பேசுவது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்