
ரஜினியின் 169-வது படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்த காலா படத்தையும் தனுஷ் தயாரித்து ரஜினி நடித்து இருந்தார். புதிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும் என்று தெரிகிறது. சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்று ரஜினி ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இதன் காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது இயக்கத்தின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. அதுபோல் உள்ளாட்சி தேர்தலிலும் ரசிகர்கள் போட்டியிடக் கூடாது என்று அறிவித்து உள்ளார். சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம்தான் வருகிறது. எனவே அதற்கு முன்பாக இன்னொரு படத்தில் நடிக்கும் முடிவில் ரஜினி இருப்பதாக கூறப்படுகிறது.