Categories: சினிமா

தம்பி சூப்பரா நடிச்சு இருக்கப்பா.! ஜெயம் ரவிக்கு போன் செய்து வாழ்த்து மழை பொழிந்த சூப்பர் ஸ்டார்

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு ஜெயம் ரவியை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டி இருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவியே பகிர்ந்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை இந்த படம் தாண்டி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்றிருக்கிறது. பல நடிகர்களுக்கும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. குறிப்பாக எம்ஜிஆர், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்கு இந்த படத்தில் எப்படியாவது ஒரு காட்சியில் நடித்து விட வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது.

தம்பி சூப்பரா நடிச்சு இருக்கப்பா.! ஜெயம் ரவிக்கு போன் செய்து வாழ்த்து மழை பொழிந்த சூப்பர் ஸ்டார் 1

எம்ஜிஆர் ஒரு படி மேலே போய் படத்தை எடுக்கத் தொடங்கினார். ஆனால் பாதியிலேயே அந்தத் திட்டத்தை கைவிட்டார். எம்ஜிஆருக்கும் சரி ரஜினிக்கும் சரி இந்த படத்தில் வந்திய தேவனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை பலமுறை ரஜினிகாந்தே மேடைகளில் கூறியிருக்கிறார். ஆனால் அவரால் அப்போது நடிக்க முடியவில்லை. வயதான காரணத்தினால் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரமாவது தனக்கு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்டதாகவும், ஆனால் அவர் அதற்கு முடியாது என்று மறுத்து விட்டதாகவும் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியிருந்தார். அப்படி இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்று பலரும் ஏங்கி இருக்க ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ரஜினிகாந்த்த் ஜெயம் ரவியை போனில் அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஜெயம் ரவி, தனது திரைப்படத்திற்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது, தன்னுடைய வருடத்தையும் நாளையும் சிறப்பாக்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார். தன்னுடைய நடிப்பு பற்றி சூப்பர் ஸ்டார் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டது போல உணர்வதாக கூறியிருக்கிறார் .தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத போதும் சிறிய நடிகர்களையும் அழைத்து பாராட்டும் சூப்பர் ஸ்டாரின் குணத்திற்கு ஒரு சல்யூட்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்