சூப்பர் ஸ்டார் தற்போது திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகம் மட்டுமில்லாது இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாராக விளங்கி கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு தொடங்கி அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கி இன்று வரை சுமார் 168 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். திரை உலகை 50 ஆண்டுகளாக கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். தனது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். தனது மூத்த மகளுக்கும் அவரது கணவர் தனுஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யாவும் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் அவ்வப்போது சென்று தனது தந்தை தனுசை பார்த்துவிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தந்தையுடன் இருக்கும புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை யம் தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களையும் அவரது மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் இருந்து அவ்வப்போது அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நாளை பிறந்தநாள் காணும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு 70வது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். அந்த பதிவில், “என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்ட நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய எழுபதாவது பிறந்த நாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவரின் நல்ல மனசு யாருக்கும் வராது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அரசியலை தாண்டி சூப்பர் ஸ்டாரும் முதலமைச்சர் முக ஸ்டாலினும் நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O