நடிகர் ஸ்ரீகாந்துக்கும் அவரது மகனுக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால் அவரது மனைவி அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். அதில் ஸ்ரீகாந்த் மகன் நன்றாக வளர்ந்து பார்ப்பதற்கு அப்படியே அவரது அப்பாவை போலவே இருக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களின் நடித்து வரும் தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு “ரோஜா கூட்டம்” என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் அவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை, நண்பன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பார்த்திபன் கனவு தான். இந்த படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். இவரை தெலுங்கில் ஸ்ரீராம் என்று அழைப்பது வழக்கமாக இருக்கிறது. ஸ்ரீகாந்தியின் தந்தை சித்தூரை சேர்ந்தவர். எனவே இவர் தந்தை வழியில் தெலுங்கும், தாய் வழியில் தமிழும் ஆவார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் சென்னைக்கே குடி பெயர்ந்தார். பின்னர் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆஹில் மற்றும் ஆஹனா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால், தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். நண்பன் படத்தில் அவர் விஜய்க்கு நண்பனாக நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜெய் மற்றும் ஜீவாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது ரமணாசுரா என்கிற தெலுங்கு படத்திலும், எக்கோ என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் 1990களில் ஜன்னல் என்கிற ஒரு சின்னத்திரை நாடகத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது ஒரு தெலுங்கு நாடகத்திலும் அவர் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வளவாக வெளியில் பகிர்ந்ததில்லை. முதன்முறையாக தனது மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் நட்சத்திரம் & என் குட்டி நட்சத்திரம். உங்கள் இருவரையும் என் வாழ்க்கையில் பெற்றதற்கு ஆசீர்வாதமாக உணர்கிறேன்..நிலவுக்கும் பின்னுக்கும் உங்களை நேசிக்கிறேன்..என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.