
நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வர இருக்கும் தர்பார் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் அண்மையில் முடித்து விட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை கணக்கில்கொண்டு ரிலீஸ் தேதி முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.