ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி.! கதறி அழுது நன்றி சொன்ன முனீஷ் ராஜா

வெளியிட்டது

நடிகர் ராஜ்கிரன் மகளுக்கும், சின்னத்திரை நடிகர் முனீஷ் ராஜாக்கும் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிய திருமணம் செய்து வைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் முனீஸ் ராஜா. பின்னர் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். இவர் நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு பின்னர் படிப்படியாக வளர்ந்து காதலாக மாறி, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு ராஜ்கிரணும், அவருடைய மனைவியும் சம்மதித்ததாக தெரியவில்லை.

ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி.! கதறி அழுது நன்றி சொன்ன முனீஷ் ராஜா 1

இந்த தகவல் தீயாய் பரவ ஆரம்பித்த நிலையில் ராஜ்கிரண் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் பிரியா என்ற இந்து பெண்ணை தான் வளர்த்து வந்ததாகவும், அவருக்கு வளர்ப்பு மகள் என்று தெரிந்தால் மனது சங்கடப்படுவாரே என்பதனால் சொல்லாமல் வளர்த்து வந்ததாகவும், தன்னுடைய பெயரையும் புகழையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜீனத் பிரியாவை முனீஸ் ராஜா அழைத்துச் சென்று விட்டதாகவும் அறிக்கையில் கூறி இருந்தார். மேலும் தானும் தனது மனைவியும் எவ்வளவோ மன்றாடியும் அந்தப் பெண் கேட்கவில்லை, உறவினர் ஒருவரை பார்க்க சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த நபருடன் ஓடி விட்டார், பணத்திற்காக அலையும் ஈனப்பிறவி முனீஸ் ராஜா என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளில் ராஜ்கிரண் விளாசி இருந்தார்.

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத முனீஸ் ராஜா தன்னுடைய மனைவியும் நானும் விரைவில் திருமண பத்திரிக்கையுடன் வந்து உங்களை சந்திப்போம். ரிசப்ஷன் நடத்த இருக்கிறோம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது மனைவிக்காக சொந்த தொழில் தொடங்க இருக்கிறேன், அதனுடைய திறப்பு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அழைப்பேன். மேலும் என் மனைவி பெயரில் ஊரில் ஒரு 50 லட்சத்திற்கு வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கும் உங்களை எல்லாம் அழைப்பேன் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் அழைத்து ஜீ தமிழில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் கண்ணீர் மல்க நன்றி கூறினர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்