நாதஸ்வரம் சீரியல் நடிகருடன் பதிவு திருமணம் செய்த ராஜ்கிரண் மகள்?? தீயாய் பரவும் தகவல்

வெளியிட்டது

தமிழில் ஒரு காலகட்டத்தில் மிகச்சிறந்த நடிகராக இருந்தவர் ராஜ்கிரண். இவர் ஒரு படத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து நல்லி எலும்பு சாப்பிடும் காட்சி இன்றும் பிரபலம். இன்று ராஜ்கிரணின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. சன்டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடரில் காமெடியனாக நடித்தவர் நடிகர் முனீஸ் ராஜா. இவரின் நடைக்கே இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். அதன் பின்னர் மற்றொரு தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற நாடகத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னர் சில படங்களில் துணை வருடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நின்றார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை, சொற்ப வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

நாதஸ்வரம் சீரியல் நடிகருடன் பதிவு திருமணம் செய்த ராஜ்கிரண் மகள்?? தீயாய் பரவும் தகவல் 1

இவருக்கும் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் இருவரின் வீட்டிலும் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் முனீஸ் ராஜாவின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். ராஜ்கிரண் இவர்களை ஏற்றுக்கொண்ட போதிலும், ராஜ்கிரணின் மனைவி இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவரும் பதிவு திருமணம் செய்து விட்டதாகவும் முனீஸ் ராஜாவின் நட்பு வட்டாரத்தில் இழுந்து தகவல்கள் வெளியானது. இது குறித்து முனீஸ் ராஜாவே ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் முகநூல் மூலமாகத்தான் இருவரும் அறிமுகமானோம், பின்னர் தங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறினார். அதை தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சனை ஏற்பட்டதாகவும் முனீஸ் ராஜா கூறினார்.

மேலும் திரையில் பலரையும் சிரிக்க வைக்கும் நான், சாதி, மதங்கள் பார்ப்பதில்லை. ஆனால் தனக்கு இவ்வாறு நடக்கிறது என்று சோகத்துடன் பேசினார். மேலும் ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது யார் மனதும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும், அதனால் ஓரிரு நாட்களில் அனைத்தும் சுமூகமாக முடிந்த பிறகு அனைத்து விஷயங்களையும் வெளியிடுகிறேன் என்றும் முனீஸ் ராஜா பேசியிருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்