சித்தார்த்துடன் சேர்ந்து யாக்கை திரி பாடலுக்கு செம்ம Vibe செய்த திரிஷா..Cute வீடியோ..!

இணையம் முழுக்க பேசுபொருளாகி இருக்கும் ஒரு பொருள்தான் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கெடுத்திருந்தனர். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சித்தார்த்தும், த்ரிஷாவும் இருக்கையில் அமர்ந்தபடியே ஒரு பாடலுக்கு ஆடி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தமிழில் எழுந்த பிரம்மாண்ட நாவலில் முதன்மை இடத்தில் பிடிப்பது பொன்னியின் செல்வன். இந்த நாவலை படிக்காத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மிகப் நேர்த்தியாக அமைந்திருக்கும். கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கே அவ்வளவு கடினமாக இருக்கும், அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்துடன் சேர்ந்து யாக்கை திரி பாடலுக்கு செம்ம Vibe செய்த திரிஷா..Cute வீடியோ..! 1

விளம்பரம்

இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட மிகப்பெரிய பிரபலங்கள் இறங்கி, கடைசியில் தோல்வியிலேயே முடிந்தது. இந்த நிலையில் பலரின் கனவுகளை தற்போது மணிரத்னம் சாதித்து காட்டியுள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக திரையில் வெளியாக உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் பெரிய அளவில் ஹிட் அடித்திருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தில் நடித்திருந்த அனைவரும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமலஹாசன், இயக்குனர் சங்கர் போன்றவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையவை  நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

சித்தார்த்துடன் சேர்ந்து யாக்கை திரி பாடலுக்கு செம்ம Vibe செய்த திரிஷா..Cute வீடியோ..! 3

விளம்பரம்

இந்த படத்தில் குந்தவையாக நடித்திருந்த நடிகை திரிஷாவும் இளஞ்சிவப்பு நிற சேலையில் வந்திருந்தார். இவருக்கு முன் இருக்கையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பின் இருக்கையில் நடிகர் சித்தார்த் அமர்ந்திருந்தார். அப்போது மேடையில் யாக்கை திரி காதல் சுடர் பாடல் குழுவினரால் பாடப்பட்டது. இதனால் குஷிசியான இருவரும் இருக்கையில் அமர்ந்தபடியே இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment