“என்னை அவர் வீட்டு மஹாலக்ஷ்மி என்று தான் அழைப்பார்” ராஜ்கிரண் பற்றி பேசும் போது உடைந்து அழுத ப்ரியா.!

வெளியிட்டது

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக இருந்த ஜீனத் பிரியா தற்போது சமூக வலைதளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்் அதில் அவர் ராஜ்கிரன் பற்றி பேசும் பொழுது மனம் உடைந்து கதறி அழுதார். சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வரும் ஒரு செய்தி தான் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா மற்றும் அவரது கணவர் முனீஸ் ராஜ் விவாகரத்து விஷயம். ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக இருக்கும் ஜீனத் பிரியா, 2002ம் ஆண்டு ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்து வந்த நடிகர் முனீஸ் ராஜாவை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ராஜ்கிரண் மற்றும் ஜீனத் ப்ரியாவின் தாயார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

"என்னை அவர் வீட்டு மஹாலக்ஷ்மி என்று தான் அழைப்பார்" ராஜ்கிரண் பற்றி பேசும் போது உடைந்து அழுத ப்ரியா.! 1
இந்த நிலையில் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் ஜீனத் பிரியா. குடித்துவிட்டு தினமும் தன்னை வந்து அடிப்பதும் ரூ.10 கோடி ரூபாய் பணம் கேட்பதுமாக முனீஸ் ராஜா செய்த கொடுமைகள் குறித்து அவர் சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டியில், “தான் முனீஸ் ராஜாவை காதலித்தது குறித்து வீட்டில் கூறிய போது எனது தந்தை அவரது சொந்த ஊரில் விசாரித்தார். அப்போது பலரும் அவர் நல்ல பையன் கிடையாது என்று கூறினர். ஆனால் நான் தான் எனது தந்தை பேச்சை மீறி அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின்னர் அவர் தன்னை வளர்ப்பு மகள் என்று கூறியது மீடியா மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது.


ஆனால் திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில் எனது தாயாரை அனுப்பி வைத்து வீட்டிற்கு தேவையான பொருட்கள், முனீஸ் ராஜாவிற்கு துணிமணிகள், அவரது தாயாருக்கு தேவையான பட்டுப் புடவைகள் என்று இரண்டு லட்சம் வரை எனக்கு அது தந்தை வாங்கி கொடுத்தார். இது போன்ற தந்தையை எங்கும் பார்க்க முடியாது. நான் அவரை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டேன். கடந்த வாரம் அவரை நேரில் சந்தித்து காலை பிடித்து நான் அழுதேன். ஆனால் அவர் என்ன நடந்தது? என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை மாறாக எனக்கு சமாதானம் சொன்னார்.” எனப் பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Facebook Video Embed Code Credits: Galatta Pink

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்