“அடிச்ச பம்பர் ஆஃபர் …குக் வித் கோமாளியை விட்டு கிளம்பும் ரக்ஷன்”!!

வெளியிட்டது

விஜய் டிவியின் தற்போதைய முன்னணி நிகழ்ச்சி என்றால் எந்தவித சந்தேகமும் இன்றி அனைவருமே குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. 3 சீசன்களை முடிக்கும் விளிம்பில் இருக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த கொரோனா காலகட்டத்தில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்கப்பட்டது. சமையல் நிகழ்ச்சியான இதில் குக்குகள் பரபரப்பாக சமைக்க அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் காமெடி பண்ணும் கோமாளிகள் என கொஞ்சம் வித்தியாசமான இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன்.

"அடிச்ச பம்பர் ஆஃபர் ...குக் வித் கோமாளியை விட்டு கிளம்பும் ரக்ஷன்"!! 1

மாடலாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய இவரை விஜய் டிவி கலகக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுக செய்தது. மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றார் ரக்ஷன். பின்னர் சவிஜய் டிவியின் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய இவரை மீண்டும் அறிமுகமான குக் வித் கோமாளியில் களமிறக்கினார்கள்.

அந்த நிகழ்ச்சியின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு ரக்ஷனும் மிக முக்கிய காரணமாகும். காமெடி டைமிங், ஸ்பான்டேனியஸ் கவுண்டர் என கலக்க துவங்கிய இவரும் கோமாளிகள் போல நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது சீசனிலும் தொகுப்பாளராக தொடர்கிறார். இந்த முகவரிகள் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகவும் உதவியது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் அறிமுகமான இவர் காமெடியில் நன்றாகவே நடித்து மக்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றார். குறிப்பாக சில எமோஷன் காட்சிகளிலும் நன்றாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பொது மீண்டும் இவர் வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கவுள்ளார். யோகேந்திரன் இயக்கத்தில் ரக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் விஷாகா திமன் என்பவர் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் தீனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் தொடக்க பூஜை நேற்று நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்