திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.! குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை – ராம் சரண் மனைவி

தெலுங்கு உலகின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். மாவீரன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கட்டுகோப்பான உடலும், திறமையான நடிப்பாலும் தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் பல ரசிகர்களை கவரந்துள்ளார் ராம்சரண். சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் கூட போலீஸாக இவர் நடித்தது பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. ராம் சரணுக்கும், தொழில் முனைவோராக உள்ள உபாசனாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் க்யூட் தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது குறித்து இவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே வந்தனர்.

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.! குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை - ராம் சரண் மனைவி 1

விளம்பரம்

இந்தநிலையில் ராம் சரணின் மனைவி சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஜக்கியிடம் அவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் தனக்கும் கணவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, என்னுடைய RRR (relationship, reproduce, role) உறவுகள், குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன், வாழ்க்கையில் எனது பங்கு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த சத்குரு குழந்தை பெற்றுக் கொள்ள உங்களுக்கு தகுதி இருந்தும் நீங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றால் உங்களுக்கு விருது தருகிறேன். உண்மையில் நிறைய இளம் பெண்களுக்கு நான் இது போல விருது அளித்துள்ளேன், தகுதி இருந்தும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் அந்த முடிவை நான் பாராட்டுவேன் என்று கூறியிருந்தார். இப்போதைக்கு நாம் பூமிக்கு செய்யும் சேவை இதுதான் என்று பதிலளித்தார்.

தொடர்புடையவை  மகள் உடம்புக்குள் புகுந்த பேயை விரட்டினாரா நயன்தாரா.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.! குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை - ராம் சரண் மனைவி 3

விளம்பரம்

மனித இனம் ஒன்றும் அழிந்துவிட போவதில்லை, அளவுக்கு அதிகமாகவே இருக்கிறோம், எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்களை வரவேற்க வேண்டும் என்று ஜக்கி கூறியிருந்தார். ஏற்கனவே இது குறித்து பேசிய ராம்சரண் சிரஞ்சீவியின் வாரிசாக மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.எனக்கென்று சில இலக்குகள் இருக்கின்றன. மனைவி உபாசனாவுக்கும் இலக்குகள் இருக்கின்றது. குழந்தை பிறந்துவிட்டால் இலக்கிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் நாங்கள் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை, சில வருடங்கள் கழித்து இது குறித்து யோசிப்போம் என்று விளக்கமளித்திருந்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment