பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரிக்கும், ராம் ராமசாமிக்கும் காதல் மலர்ந்தது போன்ற வீடியோவை தற்போது விஜய் டிவியே வெளியிட்டு இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் முதல் வாரத்திலேயே சண்டைகள், அடிதடிகள் என அதிரடியாக ஆரம்பமாகியிருக்கிறது இந்த சீசன். கமலஹாசனே 40 நாட்களில் நடக்க வேண்டியவைகள் எல்லாம் நான்கே நாட்களில் நடத்திக் காட்டி இருக்கிறார்கள், இந்த சீசன் மிக சுவாரசியமாக இருப்பதாக கூறியிருக்கிறார். எல்லா சீசன்களிலும் வருவது போல,வழக்கம்போல இந்த சீசனிலும் காதல் ஒன்று ஆரம்பித்துள்ளது. அது விஜே மகேஸ்வரிக்கும், ராம் ராமசாமிக்கும் இடையே இருப்பது போன்ற ஒரு வீடியோவை தற்போது விஜய் டிவியை வெளியிட்டு இருக்கிறது.

முந்தைய சீசன்களிலும் காதல் மலர்வது போன்ற வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக ஆரவ் மற்றும் ஓவியா, கவின் மற்றும் லாஸ்லியா, அமீர் மற்றும் பாவனிய, அபிராமி மற்றும் முகேன் போன்றவர்கள் நட்பை தாண்டி நெருங்கி பழகினர். இதில் அமீரும் பாவனியும் தற்போது அதிகாரப்பூர்வமாக காதலித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணமும் செய்து கொள்ளப் போகின்றனர். பிக்பாஸை பொறுத்த வரை காதல் காட்சிகளை ஓட்டும் பலருக்கு அந்த வீட்டில் மக்கள. செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் கடைசி வரை அந்த போட்டியில் இருப்பது உறுதியாகும். இந்த நிலையில் தற்போது சீசன் ஆறிலும் ஒரு புது காதல் மலர்ந்து உள்ளது. மகேஸ்வரி ராமிடம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருக்கும் மகேஸ்வரி, தற்போது ராமிடம் நெருக்கமாக பழகி வருகிறார். தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் ராமின் பெட்டுக்கு அருகில் வந்து தான் படுத்துக் கொள்வதாக மகேஸ்வரி கூறுகிறார். உங்களுடன் பேசிக் கொண்டே இருக்கலாம் நேரம் போகும் என்றும் கூறுகிறார். மேலும் ராம் இந்த வீட்டிலேயே எனக்கு பிடித்த ஆள் ஒருவர் என்றால் அதை நீங்கள் மட்டும் தான் என்று மகேஸ்வரியிடம் கூறுகிறார். இதனால் ராமும் மகேஸ்வரியும் காதலில் விழுந்திருக்க கூடும் என்று கணிக்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவியை சம்திங் சம்திங் என்று இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இது நட்பா அல்லது காதலா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Vijay Television