Categories: அரசியல்

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது

தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது 1
போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திர குஹா

கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெங்களூர் டவுன் காலில் கூடிய மக்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரம் அடைந்ததால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. இந்த நிலையில், பெங்களூரு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இங்கு அனைவரும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காவலர்கள்தான் அசாதாரண சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். காவலர்களுக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வருகிறது. மக்களின் போராட்டத்தைக் கண்டு டெல்லியில் உள்ள தலைவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்துக்கு அனுமதி வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தைரியம் இல்லை. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும், நாங்கள் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை” எனப் ராமச்சந்திரா குஹா பேசியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்