நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாக மாறிவிருக்கும் ஒரு செய்தி தான் ரஜினி குறித்து ரம்பா பேசியது. இதனால் தற்போது “ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி” என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவர் குறித்து நடிகை ரம்பா பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘அருணாச்சலம்’ படத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ரம்பா ஒரு பேட்டியில் பேசுகின்றார். அந்த காணொளியை பலரும் ட்விட்டரில் பரப்பி விட்டு “ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி” என்கிற ஹேஷ்டேக்கையும் சிலர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
‘அருணாச்சலம்’ படப்பிடிப்பிற்கு வட இந்திய நடிகர்களாக இருக்கும் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் வந்தபோது அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்று இருந்தேன். இதை பார்த்த ரஜினி சார் தன்னை வரவழைத்து வட இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு ஹக் செய்து நன்றாக பேசுகிறீர்கள், தென்னிந்தியர்களை பார்த்தால் கேவலமாக இருக்கா? குட் மார்னிங் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு ஓரமாக சென்று புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என தன்னிடம் ரஜினி சார் கிண்டலாக கேட்டார். அவர் இவ்வளவு ஜாலியாக பேசுவார் என்பதை எனக்கு தெரியாது. அந்த படப்பிடிப்பின் போது மிகவும் ஜாலியாக பேசியிருந்தார்” என ரம்பா கூறி இருந்தார்.
மேலும் பேசிய ரம்பா, ‘அருணாச்சலம்’ படப்பிடிப்பின் போது ஒரு முறை திடீரென விளக்குகள் அணைந்துவிட்டது. அப்போது தன்னை யாரோ பின்னால் இருந்து தட்டுவது போன்ற ஒரு உணர்வு இருந்தது. உடனே கத்தி விட்டேன். ஆனால் மீண்டும் லைட் ஆன் ஆனவுடன் தனது தோள்பட்டையில் தட்டியது யார் என ரஜினி சார் ஒரு பஞ்சாயத்து டிராமா போட்டார்.
ஆனால் அவர் தான் என்னை தட்டினார் அப்படித்தான் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரஜினியை திட்டி தீர்த்து வருகின்றனர். அதேபோல ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை கலாய்த்து ட்வீட்டுகளை பகிர்ந்து வருகிறார்.