தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த ரம்யா கிருஷ்ணனும் ரோஜாவும் தற்போது சந்தித்துக் கொண்டுள்ளனர். திருப்பதிக்கு தனது மகனுடன் தரிசனத்திற்கு சென்ற ரம்யா கிருஷ்ணன் நேராகச் ரோஜாவின் வீட்டிற்கு சென்று பேசி மகிழ்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை ரோஜா தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நீண்ட நாள் தோழியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனை சந்தித்தது குறித்து தற்போது அழகிய புகைப்படங்களுடன் ரோஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நடிகை என்று சொன்னால் அது ரம்யா கிருஷ்ணன் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல இந்திய மொழிகளில் நடித்து மிகப் பெரிய அளவிற்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக அம்மன் வேடங்களில் நடித்து 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அம்மன் என்று சொன்னாலே ரம்யா கிருஷ்ணன் முகம் நினைவுக்கு வரும் அளவிற்கு தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். 1983ல் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், அன்று தொடங்கி இன்று வரை வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் பாகுபலி படத்தில் நடித்த சிவகாமி கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது கைவசம் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைத்துறையில் பல நண்பர்களை கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கிய நண்பராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகை ரோஜா. இருவரும் இணைந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது சினிமா துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா.
தமிழக ஆந்திர எல்லையான நகரி பகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜா தற்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் நகரி பகுதியில் மிகப்பெரிய பங்களா ஒன்றைக் கட்டி அங்கு தனது கணவர் செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது மகனுடன் சென்றிருந்த ரம்யா கிருஷ்ணனை ரோஜா வீட்டிற்கு வருமாறு அழைக்க அவரும் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் செல்வமணி மற்றும் ரோஜா இருவரும் இணைந்து அவரை வரவேற்று அழைத்துச் சென்று இருக்கின்றனர். அதன் பின்னர் பூஜை அறையில் இருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு குங்குமம் மற்றும் புடவைகளை எடுத்து கொடுக்கும் வீடியோவையும் ரோஜா பகிர்ந்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O