
நடிகர் தனுஷ் இந்திய திரையுலகை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் காலம் இறங்க உள்ளார். அறிமுகமான படத்தில் மிக பெரிய கேலியும், கிண்டலும், அவுமானமும் பட்ட அவர் இன்று இந்திய சினிமா உலகிற்கே பெருமை சேர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பல்வேறு தேசிய விருதுகளும், பாராட்டுகளும் வாங்கி குவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இப்பொது உலகின் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படமான “அவென்ஜ்ர்ஸ்: எண்ட்கேம்” படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கம் படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவென்ஜ்ர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் கிரிஸ் எவன்ஸ் நடிப்பில் அவருடன் ரயன் கோஸ்லிங், அனா டீ அர்னாஸ் என 3 பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

நெட்பிளீக்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறைவான திரை அரங்குகளிலேயே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. ஒரே வாரம் அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளிலும், ஜூலை 22ஆம் தேதி நெட்பிளீக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. பயங்கர ஆக்ஷன் சண்டை கலந்த துப்பறிவு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. தி க்ரே மேன் என்ற பெயரில் வெளியான நாவலை அடிப்படியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சில மாதங்கள் முன் விவாகரத்து செய்து தனுஷும் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வரியாவின் விவாகரத்து செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை இருவரும் முடித்துக்கொண்டதால், இது தமிழ் திரை ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. இந்நிலையில் விவாகரத்துக்கு பின், தன் மகன்களுடன் நீண்ட நேரம் செலவிட்டு வருகிறார் நடிகர் தனுஷ். நாளை தனுஷின் நடிப்பில் “தி கிரே மேன்” படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ் தன் மகன்களையும் உடன் கூட்டி சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்பொது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
