HomeTour வீடியோவில் சிக்கிய வீட்டில் இருந்த முக்கியபொருள்..! பிரச்சனைகளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கொடுத்த விளக்கம்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகியவர் சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரைகளிலும் படங்கள் நடித்து வருகிறார். பல படங்களில் இவர் நடித்து உள்ளார். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமானவர் ஆகினார்.

HomeTour வீடியோவில் சிக்கிய வீட்டில் இருந்த முக்கியபொருள்..! பிரச்சனைகளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கொடுத்த விளக்கம்..! 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சமையலில் சுஜிதா கலக்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் இவர் தனது யுடியூப் சேனலில் பதிவிட்ட வீடியோவால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் வெளியிட்டு உள்ள ஹோம் டூர் வீடியோவில் இவர் வீட்டில் துப்பாக்கி இருந்தது தெரியவந்து உள்ளது. இதுமிக பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

HomeTour வீடியோவில் சிக்கிய வீட்டில் இருந்த முக்கியபொருள்..! பிரச்சனைகளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கொடுத்த விளக்கம்..! 3

விளம்பரம்

இதுகுறித்து சுஜிதா கொடுத்த விளக்கத்தில், அது தங்களது வீடு இல்லை எனவும், நீலகிரிக்கு சுற்றுலா சென்றபொழுது நண்பர் வீட்டில் அவரிடம் அனுமதி கேட்டு எடுக்கப்பட்ட வீடியோ எனவும் கூறி உள்ளார். மேலும் அது ஏர் ரைபிள் துப்பாக்கி எனவும், அதற்கு லைசென்ஸ் தேவை இல்லை என அவர் கூறியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் சுஜிதா. இதுகுறித்து வனத்துறை தங்களை எந்த கேள்வியும் கேட்கவில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment