மீனா உடன் சண்டையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இருந்து வெளியேறிய காரணத்தை கூறிய வசந்த் வசி…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர்.

மீனா உடன் சண்டையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இருந்து வெளியேறிய காரணத்தை கூறிய வசந்த் வசி...! 1

விளம்பரம்

இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வசந்த் வசி. திடீரென இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் அந்த தொடரில் நடித்து வரும் மீனா உடன் வந்த சண்டையால் வசந்த் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்போது அதற்கு வசந்த் வசி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து உள்ளார்.

மீனா உடன் சண்டையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இருந்து வெளியேறிய காரணத்தை கூறிய வசந்த் வசி...! 3

விளம்பரம்

இதுகுறித்து அவர் கூறியதில், படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்ததால் சீரியலை விட்டு வெளியேறி உள்ளதாக கூறி உள்ளார். மேலும் தனக்கும் மீனாவுக்கும் , தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்த பிரச்சனைகள் இல்லை எனவும் இது தன்னுடைய முடிவு என கூறி உள்ளார். தற்போது சீரியலில் நடிக்கும் எண்ணம் இல்லை எனவும், படங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment