நடிகை ரம்யா பாண்டியன் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இன்று மட்டும் அவர் 143 மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

‘டம்மி டப்பாசு’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து கவனம் பெற்றார்.
ஆனால் மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் கிளாமர் போட்டோ ஷூட்டை கையில் எடுத்தார். சேலையில் இடுப்பு தெரிவது போல இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மிக வைரலானது.
அதன் பின்னரும் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்னர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட பின் பெரிய அளவில் அறியப்பட்டவராக மாறினார்.
தற்போது சில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கிறார். மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டு வருகிறார் ரம்யா.
அந்த வகையில் இன்று மட்டும் அவர் சுமார் 143 மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் ரம்யா பாண்டியனின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!