மறைந்த சின்ன கலைவாணர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட ரம்யா பாண்டியன்.!

வெளியிட்டது

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரம்யா பாண்டியன் செய்த அந்த விஷயத்தை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

மறைந்த சின்ன கலைவாணர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட ரம்யா பாண்டியன்.! 1

டம்மி டப்பாசு என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பின்னர் இவர் ஜோக்கர் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தப் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய போதும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இவர் பட வாய்ப்பை இழந்த நடிகைகள் எடுக்கும் ஆயுதமாக கிளாமர் போட்டோ ஷூட்டை கையில் எடுத்தார். சேலையில் இவர் எடுத்த போட்டோக்கள் மிக வைரலானது.

அப்படியும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காமல் போகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சீசன் 1ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சமையலில் அசத்தி இருந்தார் ரம்யா பாண்டியன்.

பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் அறியப்பட்டவராக இருக்கிறார் ரம்யா பாண்டியன். இந்த சீசனில் இவருக்கு “விஷ பாட்டில்” என்று ரசிகர்கள் பெயர் வைத்திருந்தனர்.

தற்போது சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் அடிக்கடி instagramயில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்காக மரக்கன்றுகளை வாங்கி அதை நட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் ரம்யா பாண்டியனின் இந்த செயலுக்காக அவரை பாராட்டி வருகின்றனர்

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்