தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தனை நாட்களாக இவரது குடும்ப புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து நிலையில் தற்போது அவரே சமூக வலைதளப் பக்கத்தில் தன் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.! 1
மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலமாக பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக இருப்பவர் மீரா கிருஷ்ணன். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான நாயகி என்கிற நாடகத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் நாடகத்திலேயே பெஸ்ட் மதர் அவார்ட் என்கிற விருதை சன் குடும்ப விருதுகளில் பெற்றார்.

விளம்பரம்

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.! 3

பின்னர் கலர் தமிழில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி என்கிற நாடகத்திலும் சன் டிவியில் ஒளிபரப்பான அருந்ததி என்கிற நாடகத்திலிருந்து நடித்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு திரும்பிய அவர் அன்புடன் குஷி, ரெட்டை ரோஜா போன்ற நாடகங்களில் நடித்தார். அதன் பின் சித்தி 2, திருமகள், தமிழும் சரஸ்வதியும், மாரி, கார்த்திகை தீபம் போன்ற பல நாடகங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  CWC-ல் நடக்கவுள்ள முதல் எலிமினேஷன்..இந்த வாரம் வெளியேற போவது யார்? | Cook With Comali Season 3

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.! 5

இதில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த நாடகம் என்று சொன்னால் அது தமிழும் சரஸ்வதி தான். இதில் கோதை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பலரின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார் மீரா கிருஷ்ணன்.

விளம்பரம்

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.! 7
தைரியமான பெண்ணாகவும், அதே சமயம் குடும்பத்தையும் தான் நடத்தி வரும் நிறுவனங்களையும் கட்டுக்கோப்பாகவும் நடத்தி வரும் தைரியமான ஒரு பெண்ணாக இந்த சீரியலில் பட்டையை கிளப்பி வருகிறார். இதனால் மீரா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.! 9

விளம்பரம்

தற்போது கதைப்படி தனது மகனை வெறுத்து ஒதுக்கும் கோதை, மருமகன் பேச்சை கேட்டுக் கொண்டு அவரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி இருக்கிறார். விரைவில் அவர் இந்த சூழ்ச்சியில் இருந்து வெளியே வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.! 11

விளம்பரம்

இந்த நிலையில் மீரா கிருஷ்ணனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அவரின் இரண்டு மகன்களின் புகைப்படங்களும் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சீரியலில் தமிழ் மற்றும் கார்த்திக் என்று இரண்டு பெரிய மகன்கள் இருக்கும் நிலையில் நிஜ வாழ்க்கையில் அவருக்கு நக்ஷித் மற்றும் தன்வந் என்ற இரண்டு குட்டி மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.!

விளம்பரம்

Leave a Comment