சரஸ்வதிக்கு இனிமே பிள்ளையே பொறக்காது.! சாபம் விடும் ராகினி! வெளுத்து வாங்கும் கோதை.!

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வளைகாப்பில் வைத்து சரஸ்வதிக்காக பேசிய கோதைக்கு எதிராக தற்போது அவரது மகள் ராகினி பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே செல்லும் கோதை, இனி ஒரு வார்த்தை கூட அவர்களைப் பற்றி நீ பேசக்கூடாது என்று ராகினியை திட்டித் தீர்த்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கோதையின் கோபம் நியாயமானது தான் என்றும் ராகினியை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சரஸ்வதிக்கு இனிமே பிள்ளையே பொறக்காது.! சாபம் விடும் ராகினி! வெளுத்து வாங்கும் கோதை.! 1

தனது மகன் தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பின்பு தற்போது கோதைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை புரிய வருகிறது. தன் மகன் மீது எந்த தவறும் இருக்காது. தன் மருமகன் அர்ஜுன்தான் ஏதோ தவறு செய்கிறார் என்கிற நிதர்சனம் கோதைக்கு தற்போது புரிய ஆரம்பிக்கிறது. அதே வேளையில் கோதையின் மூத்த மகனுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் குழந்தை இல்லை. பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் அவர்கள் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் அசிங்கப்படுத்தப்படுகின்றனர். குழந்தை இல்லை என்று சொல்லி சரஸ்வதியை அசிங்கப்படுத்த அவருக்கு ஆதரவாக கோதை பேசுகிறார். சரஸ்வதி மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற பெண், அவர் நலங்கு வைக்கவில்லை என்றால் நான் நலங்கு வைக்க மாட்டேன் என்று சொல்லி கோபத்தில் கத்துகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடிப்பில் பின்னி எடுக்கும் தாமரை! டான் படத்தின் வசனத்தை அப்படியே பேசி காட்டிய தாமரை ஐக்கி..!

சரஸ்வதிக்கு இனிமே பிள்ளையே பொறக்காது.! சாபம் விடும் ராகினி! வெளுத்து வாங்கும் கோதை.! 3

பின்னர் சரஸ்வதியும் தமிழும் கோவிலில் அமர்ந்து தனக்கு குழந்தை இல்லையே என்று ஏக்கத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கேட்டுவிட்டு வீட்டிற்கு வரும் கோதையிடம் தற்போது ராகினி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல எண்ணம் இருக்கப்பவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும், தமிழுக்கும் சரஸ்வதிக்கும் அடுத்தவர்களை கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தான். அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் குழந்தை பிறக்காது என்று வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். அப்போது கடுப்பான கோதை ராகினியை லெஃப்ட் ரைட் வாங்குகிறார். மேலும் நீ எல்லாம் டாக்டருக்கு படித்த பெண் தானே நீ கூட இப்படி பேசுகிறாய் என்று வசுவும் தன் பங்குக்கு ராகினியை வெளுத்து வாங்குகிறார்.

விளம்பரம்

சரஸ்வதிக்கு இனிமே பிள்ளையே பொறக்காது.! சாபம் விடும் ராகினி! வெளுத்து வாங்கும் கோதை.! 5

அப்போது குறுக்கிடும் நடேசன் ராகினியின் நாத்தனார் கூட குழந்தை இல்லாமல் இருப்பதைக் கூற ராகினி வாயடைத்துப் போகிறார். பின்னர் ராகினியை திட்டி அவர்கள் அனுப்பி விடுகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பலரும் ராகினியை கமெண்டில் பார்த்தாலே எரிச்சலாக வருவதாக கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment