குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை ஆண், பெண், குழந்தைகள் என எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு நிகழ்ச்சி முடியப் போகிறதே என்று பார்க்கும் அனைவரையும் வருத்தப்பட வைத்த ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்று உள்ளது என்றால் அது குக் வித் கோமாளிதான். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

சுட்டித்தனங்கள் நிறைந்த உதவியாளரை கோமாளி என்ற பெயரில் வைத்துக் கொண்டு குக்குகள் சமையல் செய்யும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பல பேருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு Stress Buster ஆக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது இரண்டு சீசன்களை முடித்து மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மனோ பாலா, கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, பாரதி கண்ணம்மா ரோஷ்ணி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், ராகுல் தாத்தா, அந்தோணி தாசன், வித்யூலேகா ராமன், ஸ்ருதிகா என 10 குக்குகள் பங்கேற்று உள்ளனர். 3 சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Vijay Television

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரத்திற்க்கான முதல் எலிமினேஷன் நடைபெற உள்ளது. அதில் சந்தோஷ் பிரதாப், மனோபாலா, ஸ்ருதிகா ஆகிய மூவரும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்பதை காண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch cook with comali promo below..