“அண்ணே, எனக்காக வா அண்ணே.!” தமிழை அழைத்த ராகினி.! மனம் மாறிய தமிழ்.! ப்ரோமோ இதோ

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ராகினி தனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தமிழ் மற்றும் கோதை இருவரும் வரவேண்டும், இவர்கள் தான் என் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதை நம்பி தற்போது தமிழும் பெயர் சூட்டு விழாவிற்கு வருகை தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் பலரும் இதில் ஏதோ உள் குத்து இருக்குமோ? என்று சந்தேகத்தை வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் தற்போது கதையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அண்ணே, எனக்காக வா அண்ணே.!" தமிழை அழைத்த ராகினி.! மனம் மாறிய தமிழ்.! ப்ரோமோ இதோ 1
அதற்கு முக்கிய காரணம் கதையில் புதிதாக என்ட்ரி கொடுத்த மேகனா கதாபாத்திரம்தான். இவர் தமிழ் மீது காதல் கொள்வது போலவும் தமிழுக்கு திருமணமான விஷயத்தை இவரிடம் இருந்து நமச்சி மறைக்க பாடுபடுவது போலவும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது இந்த சீரியலின் ரசிகர்கள் கதைக்களத்தை மாற்றுமாறு தொடர்ந்து இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது ராகினி தமிழின் வீட்டிற்கு வருகை தருகிறார். அவரைப் பார்த்த தமிழின் தந்தை மற்றும் தமிழின் சகோதரன் கார்த்திக் இருவரும் எதற்காக இங்கு வந்தாய்? வெளியே போ என்று சொல்லி திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் ராகினியை உள்ளே அழைத்துப் பேசுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அப்பாவுக்கு உதவி செய்ய பொம்மை தொழிலில் இறங்கிய மஹா.! வீடியோ எடுத்து வெளியிட்ட விஷமிகள்.!

"அண்ணே, எனக்காக வா அண்ணே.!" தமிழை அழைத்த ராகினி.! மனம் மாறிய தமிழ்.! ப்ரோமோ இதோ 3

அப்போது தனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு கோதையும், தமிழும் வரவேண்டும். அவர்கள்தான் என் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ராகினி கண்ணீர் மல்க கூறுகிறார். ராகினியின் இந்த நாடகத்தை நம்பும் தமிழ் தான் பெயர் சூட்டு விழாவிற்கு வருகை தருவதாக உறுதி அளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழுக்கு ஏதோ ஆபத்து கண்டிப்பாக காத்திருக்கிறது என்று சொல்லி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment