Categories: சினிமா

தந்தைக்காக மிருமாக மாறிய மகன்.! ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ தமிழ் ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

ஹிந்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுமே எதிர்பார்த்து காத்திருந்த ஒரு திரைப்படம் தான் ‘அனிமல்’. ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பிரபல இயக்குனர் சந்திப் வாங்கா இயக்கியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தைக்காக மிருமாக மாறிய மகன்.! ரன்பீர் கபூரின் 'அனிமல்' தமிழ் ட்ரைலர் வெளியானது.! 1
தன்னுடைய தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகனாக ரன்பீர் கபீர் நடித்திருக்கிறார். தன்னுடைய தந்தைக்காக அவர் கொலைகள் செய்யவும் துணிகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை பூஷன் குமார் தயாரித்திருக்கிறார். மேலும் ரன்பீர் கபூருடன் இணைந்து அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, திருப்தி திம்ரி, பாபி தியோல் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலரைக் நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: T-Series Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்