விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாக இருக்கிறது. அதில் தமிழ்நாட்டின் பக்தி பாடல்கள் பாடுபவர்களும், அதை ரசித்து கேட்கும் ரசிகர்களும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் இஸ்லாமிய பெண் ஒருவர் கணபதி பாடல்களை பாடிக் காட்டுகிறார். மேலும் அவர் விரும்பி கேட்ட முருகன் பாடலை பாடகர்கள் அனைவரும் இணைந்து பாடி இருக்கின்றனர். இதனால் ‘நீயா நானா’ அரங்கமே ‘குன்றத்திலே குமரன்’ பாடலைப் பாடி செம்ம Vibe செய்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் ‘நீயா நானா’ இரு எதிரெதிர் கருத்துக்களைக் கொண்ட தரப்பினரை எதிரெதிரே அமர வைத்து அவர்களுக்குள் விவாதம் நடத்தி தீர்வை சொல்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். பல்வேறு தலைப்புகளை விவாதித்துள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ்நாட்டில் பல இடங்களில் விரும்பி கேட்கப்படும் பக்தி பாடல்களும், மற்றும் அதை ரசித்து கேட்கும் ரசிகர்களும் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாடகர்கள் ஒருபுறமும், அதன் ரசிகர்கள் ஒரு புறமும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது இஸ்லாமிய பெண் ஒருவர் “பொம்ம பொம்மதா” பாடலை மிக அழகாகப் பாடி காட்டுகிறார்.
மேலும் “குன்றத்திலே குமரனுக்கு” கொண்டாட்டம் என்கிற பாடலையும் அவர் பாடச் சொல்லி கேட்க, பலரும் அந்த பாடலை பாடி அரங்கத்தில் உள்ள அனைவரும் செம்ம Vibe செய்து இருக்கின்றனர். இந்த ப்ரோம்க்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த வாரம் சரியான சம்பவம் இருக்கிறது என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்..!
YouTube Video Embed Code Credits: Vijay Televsion