இந்த பிரம்மாண்ட படத்திற்கு ராஷ்மிகா வேண்டாம் என்ற ஷங்கர்! என்ன காரணம் தெரியுமா

வெளியிட்டது

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு பிரபலம் ராம் சரண் உடன் இணைந்து பான்-இந்தியா படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸாகும் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு இது 50வது படமாகும். இவருடன் ஷிரிஷும் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த பிரம்மாண்ட படத்திற்கு ராஷ்மிகா வேண்டாம் என்ற ஷங்கர்! என்ன காரணம் தெரியுமா 1

தமன் இசையில் உருவாகும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது. முதல் நடிகையாக முதலில் கியாரா அத்வானி, ஆலியா பட், மாளவிகாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததில் கியாரா அத்வானி கதாநாயகியாக தேர்வானார்.இரண்டாம் கதாநாயகியாக முதலில் ஷங்கர் ராஷ்மிகா மந்தனாவை தான் நடிக்க வைப்பதாக இருந்தது.

ஆனால் அவர் முன்பைப் போல் அல்லாமல் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார் என்று கூறப்படுகிறது . மேலும் மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால் சம்பளமும் அதிக அளவில் கேட்கிறாராம் ஆதலால் ராஷ்மிகாவிற்கு பதிலாக அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதான் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்