பொன்னியின் செல்வன் படத்தின் ராட்சஸ மாமனே பாடல் உருவான விதம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் அமரர், கல்கியின் கைவண்ணத்தில் உருவான தமிழில் மிகப்பெரிய நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை படிக்காத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவரிடத்திலும் பிரபலம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து மிக சுவாரசியமாக எழுதி இருப்பார் கல்கி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்று பலர் எண்ணியிருந்த நிலையில் அந்த கனவை நிறைவேற்றி காட்டியுள்ளார் மணிரத்தினம். இந்தப் படம் தன்னுடைய 40 ஆண்டுகால கனவு என்றும் அது தற்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்றும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் பேசியிருந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார் பிரகாஷ்ராஜ், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர். போர் காட்சிகள், குந்தவை மற்றும் நந்தினி சந்திப்பு, ஆதித்த கரிகாலனான விக்ரமின் காட்சிகள் என்று டீசரிலேயே மிக பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.!
படத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நான்கு பாடல்கள் வெளியாகியிருக்கிறது. வந்திய தேவனுக்காக “பொன்னி நதி பார்க்கணுமே” என்ற பாடலும், ஆதித்த கரிகாலனுக்காக “சோழா சோழா” என்ற பாடலும், குந்தவை மற்றும் வானதியின் நட்புக்காக “சொல்” என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் நாவலில் வரும் ஒரு சின்ன கூத்து நிகழ்விற்காக “ராட்சச மாமனே” என்ற பாடலும் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த ராட்சச மாமனே பாடல் உருவான விதம் பற்றிய சிறிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் கார்த்திக்கும் மற்றும் வானதியாக நடிக்கும் சோபிதாவுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Tips Tamil