பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து 5வது சிங்கிள் “அலைகடல்” பாடல் வெளியானது.! | Ponniyin Selvan

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்திலிருந்து ஐந்தாவது சிங்கிள் பாடலாக “அலைகடல்” என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருப்பதால், படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகிறது. மேலும் பாடல்கள் உருவான விதம் பற்றியும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து 5வது சிங்கிள் "அலைகடல்" பாடல் வெளியானது.! | Ponniyin Selvan 1

விளம்பரம்

ஏற்கனவே படத்திலிருந்து நான்கு பாடல்களும், டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இவை அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஒவ்வொரு வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் பேட்டி அளித்திருந்த இயக்குனர் மணிரத்தினம் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆறு மாதம் முதல் ஒன்பது மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, சொல் என்ற நான்கு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஐந்தாவது பாடலாக “அலைகடல்” என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  லானே தங்கலானே..! தங்கலான் படத்தின் War பாடல் Video வெளியாகியது..!

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து 5வது சிங்கிள் "அலைகடல்" பாடல் வெளியானது.! | Ponniyin Selvan 3

விளம்பரம்

பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் தான் பூங்குழலி. இந்த கதாபாத்திரமானது அலை கடலை தனது படகால் அசாத்தியமாக கடந்து செல்லும், ஒரு தைரியமான பெண்மணியாக கல்கி இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார். வந்திய தேவனுக்கு பொன்னி நதி பாடலும், ஆதித்த கரிகாலனுக்கு சோழா சோழா என்ற பாடலும், குந்தவை மற்றும் வானதிக்கு சொல் என்ற பாடலும், வந்திய தேவன், வானதி, குந்தவை ஆகியோருக்கு ராட்சச மாமனே என்ற பாடலும் வெளியாகியிருந்தது. தற்போது ஐந்தாவதாக பூங்குழலிக்கு அலைகடல் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை நீங்களும் காண…Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tips Tamil

விளம்பரம்

Leave a Comment