விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த ரவீனாவை அவரது குடும்பம் மேளதாளங்கள் முழங்க வரவேற்று இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பட்டாசுகள் வெடித்தும், செண்டை மேளங்கள் முழங்கியும், கேக் வெட்டியும் ரவீனாவை அவர்களது குடும்பத்தினர் வரவேற்று இருக்கின்றனர். அந்த வீடியோவை ரவீனா தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் .அந்த வீடியோவிற்கு லைக்களும் குவிந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌன ராகம்’ என்கிற சீரியலின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் ரவீனா. பின்னர் இவர் ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கெடுத்திருக்கிறார். அதன் பின்னர் ரவீனாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இவர் தனது காதலரான மணியுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு ஆதரவாக விளையாடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே 91 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடி வந்த அவர் ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவரை அவரது குடும்பத்தினர் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்று இருக்கின்றனர் அது மட்டுமில்லாமல் வான வேடிக்கைகள் வெடித்தும், கேக் வெட்டியும் அவர்கள் ரவீனாவை வரவேற்று இருக்கின்றனர். அந்த வீடியோவை ரவீனா தற்போது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது..! நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Instagram Video Embed Code Credits: Raveena Daha