“3 மாசம் கூட தாங்காதுனு சொன்னாங்க” முதல் திருமண நாளில் ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்.!

வெளியிட்டது

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவி மகாலட்சுமியுடன் இணைந்து தனது முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த திருமணம் ஒரு வருடம் கூட தாங்காது என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில், “ஒரு வருடம் மிக வேகமாக ஓடிவிட்டது. கடந்த வருடம் இந்த நாட்டுடைய பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான், போற இடம் எல்லாம் ஏதோ கண்காட்சி பொருள் போல எங்களை பார்ப்பார்கள், இது எப்படி சாத்தியமாச்சு? நிச்சயம் பணத்துக்காக தான், மூன்று மாதம் தாங்குமானு பார்ப்போம், இது இன்னும் எவ்வளவு நாளைக்கு? சீக்கிரம் ரெண்டும் அடிச்சுக்கிட்டு இன்டர்வியூ கொடுக்கும் பாருங்கன்னுலாம் சொன்னாங்க.

"3 மாசம் கூட தாங்காதுனு சொன்னாங்க" முதல் திருமண நாளில் ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்.! 1

எனக்கும் நிறைய தோணுச்சு இவ பயங்கர ஆட்டிட்யூட் போல, கோலம் போடுவது, காபி போடுறது, சமைக்கிறது, வீட்டு வேலைக்கு எல்லாமே ஆள் தான் வைக்கணும் போல என்று நினைத்தேன். விடிய காத்தால எந்திரிச்சு சுத்தி சுத்தி கோலம், சூப்பரான காபி, கொஞ்சம் கண்றாவியான சமையல், நல்லா இருக்கு பாப்போம் மூணு மாசத்துக்கு அப்புறம் swiggy இல்லைன்னா டன்சோவானு நினைச்சேன். பாப்பா கலக்கிட்டப்பா. இது நம்ம டிவில பாக்குற சீன் எல்லாம் இல்ல, அதுக்காக திமிருக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, பட் காதல் மட்டும் உங்க வீட்டு காதல்,எங்க வீட்டு காதல் இல்ல, முரட்டுத்தனமா காதல் பண்றா.

என் மேல ரொம்ப லவ் வந்துச்சுனா உடனே காமிச்சே தீரனும்னு சமைக்க போயிடுவா. அப்பதான் எனக்கு என்னோட இன்சூரன்ஸ் பாலிசி ஞாபகம் வரும். போன வாரம் தான் பீன்ஸ் செய்ய ஆரம்பிச்சா. தேவுடா..! நாங்க பிரிஞ்சிட்டோம் அப்புறம் நாங்க சோகத்தில் வாழ்கிறோம் என்று 11 மாசமா youtubeல வீடியோ போகும் போதெல்லாம், “அம்மு நம்ம வாழ்ந்து காட்டணும்னு சொல்லிட்டு பைத்தியமா இன்னும் லவ் பண்ணுவா” அப்ப அந்த யூட்யூப் மேல அப்படி ஒரு கோபம் வரும். அவ அந்த ரஜினி சார் படத்தில் வர ராதிகா மேம் மாதிரி நடுராத்திரி இட்லி சுட்டு மாமா சாப்பிடுங்கன்னு சொல்லுவா அந்த அளவுக்கு லவ் டூட்.

இப்படி அவளோட உண்மையான நேர்மையான அன்புக்கு நான் தகுதியானவனானு தெரியல. நம்ம வாழ்க்கை எவ்வளவு அழகு என்று நம்மள சந்தோஷமா சிரிக்க வச்சுட்டே பார்க்கிற பொண்ண விட, சந்தோசத்துல அழ வைக்கிற பொண்ணுதான் நமக்கு அழகான வாழ்க்கை தர முடியும். மை பங்காரம் மகாலட்சுமி. நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம், நல்ல கணவன் அமைவது இறைவன் வளர்த்த விதம் என்று பதிவிட்டு இருக்கிறார்” அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்