கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து இருக்கும் ஒரு ஜோடிகள் என்றால் அது ரவீந்திரன் மகாலட்சுமி ஜோடி தான். லிப்ரா ப்ரோடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், தற்போது இரண்டாவதாக சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்தான். இருவர் வீட்டிலும் பேசி திருப்பதியில் வைத்து கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்ட பிறகு இந்த ஜோடி மிகப் பெரிய வைரலானது. யூடியூப் சேனல், மீடியாக்கள், செய்தி சேனல்கள் என அனைத்திலும் இவர்களின் பேட்டி வைரல் ஆகி வருகிறது.

இவர்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. பலர் இவர்களின் திருமணத்தை வாழ்த்தி வருகின்றனர். ரவீந்திர் சிறுவயதில் ஏற்பட்ட அலர்ஜிக்கு ஸ்டீராய்டு வகை மாத்திரை சாப்பிட்டு அவரின் உடலில் கொழுப்பை கரைக்கும் செல்கள் செயலிழந்து விட்டன. அதனால் உடல் எடை கூடி 200 கிலோ இருப்பதாக தெரிவித்தார். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து ரவீந்தரை கொண்டுள்ளார். இது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்ற போதிலும் நெட்டிசன்கள் பலரும் மகாலட்சுமியை, தயாரிப்பாளர், பணம் நிறைய இருக்கும் என்பதாலேயே தான் திருமணம் செய்து கொண்டதாக மகாலட்சுமி விமர்சித்து வந்தனர். இதற்கு பலமுறை மகாலட்சுமியே பதிலடி கொடுத்திருந்தார்.
தான் மனதை பார்த்து, ஒன்றை வருடங்களாக காதலித்து, பின்பு தான் திருமணம் செய்து கொண்டேன். தனக்கு பணத்திற்கு எந்த குறையும் இல்லை. தனது தந்தை பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர்.மேலும் தானே மாதம் மூன்று லட்சம் வரை சம்பாதிக்கிறேன். எனக்கு பண தேவை என்று எதுவும் இல்லை என்று காட்டமான விளக்கம் அளித்து இருந்தார். இருந்தபோதிலும் இவர்கள் இருவரையும் விமர்சிக்கும் நபர்கள் இருக்கவே தான் செய்கின்றார்கள். தற்போது இருவரும் ரவீந்திரனின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள். திருச்சிக்கு அருகே உள்ள டால்மியாபுரம் என்னும் ஊரில் ரவீந்திரனின் குலதெய்வ கோயில் இருக்கிறது. அங்கு சென்று அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ, இனி துவங்கலாம் குலதெய்வத்தின் அருளோடு, நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி, நம்மை வெறுக்கும் உள்ளங்களுக்கு மிக்க நன்றி, ஒருநாள் அவர்களையும் நம்மை நேசிக்க வைப்போம் என்றும் உங்கள் ரவி மற்றும் மிஸஸ் ரவி என்று பதிவிட்டு இருக்கிறார்.