சீரியலில் இருந்து விலகும் மஹாலக்ஷ்மி? இதான் காரணமா? அவரோட மாஸ்டர் பிளான் இதானா?

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி விரைவில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் வேறு ஒரு மாஸ்டர் பிளான் வைத்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்ற நாடகத்தின் மூலமாக சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் மகாலட்சுமி. இவர் அதற்கு முன்பாக சன்மியூசிக்கில் விஜேவாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்தது. சீரியலில் அவர் வில்லத்தனங்களை செய்யும் வில்லி கேரக்டர்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வந்தார். அவருக்கு ஏற்கனவே அணில் என்பவர் உடன் திருமணம் ஆகி சச்சின் என்கிற மகனும் இருக்கிறார்.

சீரியலில் இருந்து விலகும் மஹாலக்ஷ்மி? இதான் காரணமா? அவரோட மாஸ்டர் பிளான் இதானா? 1

முதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது ஆக திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமானது முதல் பல சர்ச்சைகள் எழுந்தன. பலரும் பணத்திற்காகத்தான் ரவீந்தரை, மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக விமர்சித்து வந்தனர். ஆனால் இதற்கு விளக்கம் கொடுத்த மகாலட்சுமி தானே மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். மேலும் தனது தந்தை மிகப்பெரிய படங்களில் பணியாற்றிய நடன கலைஞர். அதனால் தனக்கு பணத்திற்கு எதுவும் கஷ்டம் கிடையாது. மனதை பார்த்து தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். திருமணம் ஆனது தொடங்கி இவர்கள் பல தொலைக்காட்சிகளில் பேட்டி எடுத்து வந்தனர்.

தற்போது மகாலட்சுமி பற்றிய ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இது பற்றி முழு விவரம் தெரியவில்லை. ஆனாலும் மகாலட்சுமி சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு நாடகங்கள் தயாரிப்பதில் ஈடுபாடு காட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் அவர் ஒரு நாடகத்தை தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கணவர் ரவீந்தரும் தயாரிப்பாளர் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மகாலட்சுமி வெளியிடுவார் என்று தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்