Categories: சினிமா

நான் அணிந்திருக்கும் புன்னகை நீ எனக்கு தந்தது.! கணவரை கொஞ்சி தீர்க்கும் மஹாலக்ஷ்மி

வெளியிட்டது

நயன்தாரா விக்னேஷ் சிவனை மிஞ்சும் அளவிற்கு தற்போது ரொமான்ஸில் பின்னி எடுத்து வருகின்றனர் ரவீந்தரும் மகாலட்சுமியும். தனது கணவரை கண்ணே, மணியே, தங்கமே என மகாலட்சுமி வர்ணித்து போஸ்ட்களை தொடர்ந்து போட்டு வருகிறார். தற்போது கூட அவர் அவ்வாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் வைத்து சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் ஆனது முதல் இன்று வரை வைரல் ஜோடிகளாகவே வலம் வருகின்றனர். மகாலட்சுமிக்கு ஏற்கனவே அணில் என்பவருடன் திருமணம் ஆகி ஆறு வயதில் சச்சின் என்ற மகன் இருக்கிறார். அவருடன் விவாகரத்தான நிலையில் தற்போது இரண்டாவது தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்திருக்கிறார்.

நான் அணிந்திருக்கும் புன்னகை நீ எனக்கு தந்தது.! கணவரை கொஞ்சி தீர்க்கும் மஹாலக்ஷ்மி 1

திருமணம் ஆன பின்பு இருவரும் ஹனிமூன் வெளிநாடு செல்வார்கள் என்றெல்லாம் வதந்தி பரவிய நிலையில், ரவிந்தர் மகாலட்சுமி தம்பதிகள் சேனல் சேனலாக பேட்டி கொடுத்து வந்தனர். இருவரும் குலதெய்வ கோயில், திருச்செந்தூர் முருகன் கோவில் என்று கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு வீடியோ இணையதளத்தில் கசிய தொடங்கியது. அதில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரையும் அழைத்து விஜய் தொலைக்காட்சி “வந்தாள் மகாலட்சுமியே” என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர். இதற்கு மகாலட்சுமியும் ரவீந்தரும் மீண்டும் புதுமண தம்பதிகள் போல் உடை அணிந்து கலந்து கொண்டிருந்தனர். அதை பார்க்கும் பொழுது திருமண வரவேற்பு தான் கொடுக்கிறார்களோ என்ற எண்ணம் அளவிற்கு உடை, மிக அலங்காரமாக இருந்தது.

ஆனால் அது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர்கள் அவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது. தற்போது மகாலட்சுமியை அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து தனது கணவர் பற்றி ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அதில் நான் அணிந்திருக்கும் இந்த புன்னகை நீங்கள் தந்தது என்று புகைப்படத்துடன் பதிவிட்டு ரவீந்தரை புகழ்ந்து இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்