தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜீத். ரசிகர்கள் இவரை செல்லமாக தல என்று அழைப்பதுண்டு. சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தானாக உழைத்து முன்னேறிய சிலரில் தல அஜீத்தும் ஒருவர். அதனால்தான் என்னவோ இவரை வெறுப்பவர்கள் மிக்குறைவு. இவர் நடிப்பில் கடைசியக வெளிவந்த படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் அவர்கள் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் தல படம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஏகே61 என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் அஜீத் அவர்கள். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த படத்தையும் வினோத்தே இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் பாதி புனேவில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வில்லன் மற்றும் ஹீரோ இரண்டு கதாபாத்திரத்துலும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். வெள்ளை முடி, வெள்ளை மீசை, தாடி என்று வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

தற்போது அவரின் வீடியோ ஒன்று சமூக வரைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்த நாளுக்காக கடிதம் ஒன்றை எழுதிவிட்டு அவருக்கு போன் செய்து பேசியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..