RCBயை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி PBKS அணி வெற்றி.

வெளியிட்டது

நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதின. மும்பை ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் ஜெயித்த RCB  பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் தொடங்கிய பஞ்சாப் அணி இங்கிலாந்து வீரர் ஜானி பர்ஸ்டோவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டிற்கு 209 ரன்களை குவித்தது. அந்த அணியின் பர்ஸ்டோவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் முறையே 66 ரன்களும், 70 ரன்களும் குவித்தனர். இதில் பர்ஸ்டோவ் 66 ரன்களில் 7 சிக்ஸர் 4 பவுண்டரி என வெறும் 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5  பவுண்டரி உடன் 70 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோஷ் ஹஸ்ட்லேவூட் விக்கெட்டுகள் இன்றி பந்து வீசி 4 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 34 ரங்களுடன் 4 விக்கெட்டுகளை விழத்தினார்.

RCBயை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி PBKS அணி வெற்றி. 1

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி கணிசமான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியில் மாக்ஸ்வெல் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியில் ராபாடா 21 ரங்களுடன் 3 விக்கெட்டும்,ரிஷி தவான் மற்றும் ராகுல் சஹர் முறையே 36 மற்றும் 37 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றியுடன் இன்னும் பிளே ஆஃப் தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கிறது. 13 ஆட்டங்கள் ஆடியுள்ள பெங்களூரு அணி 7 வெற்றிகளுடன் 4 இடத்தில இருந்தாலும் இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் உள்ளது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் அந்த அணி குஜராத் அணியுடன் மொத்த உள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்