சென்னை ரியல் எஸ்டேட் உலகளவில் 5ஆம் இடம்

உலகளவிலான ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 5ஆம் இடம் பிடித்துள்ளது.

சென்னை ரியல் எஸ்டேட் உலகளவில் 5ஆம் இடம் 1
சென்னை ரியல் எஸ்டேட்

எஸ்டேட் ரியல் எஸ்டேட் அடிப்படையில் நகரங்களுக்கான மேலாண்மை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சமூகப் பொருளாதாரம், ரியல் எஸ்டேட் வியாபாரம், வணிகம், வர்த்தகம், மக்கள் தொகை, வெளிப்படைத்தன்மை, விமானப் பயன்பாட்டாளர்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு, பாதுகாப்பான சமூகக் கட்டமைப்பு உள்ளிட்ட 18 அம்சங்களை கொண்டு அமெரிக்காவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜோன்ஸ் லாங் லா சல்லே (ஜெஎல்எல்) ஆய்வு நடத்தியது.

அதில் 38 புள்ளிகள் பெற்று சென்னை மாநகரம் உலகளவில் 5ஆம் இடம்பிடித்துள்ளது. உலகம் முழுவதும் 130 நாடுக்ளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆசியாவில் மட்டும் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்திலும், பெங்களூர் 2ஆம் இடத்திலும், புதுடெல்லி 6வது இடத்திலும், புனே12வது இடத்தையும், கொல்கத்தா 16வது இடத்தையும், மும்பை 20வது இடத்தையும் பிடித்துள்ளன.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்