டிவிஎஸ் விற்பனை சரிவு!

இந்தியா ஆட்டோ மொபைல் துறையில் முக்கிய நிறுவனமான டிவிஎஸ் 16 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டிவிஎஸ் விற்பனை சரிவு! 1

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலையில் இருந்து வரும் காரணத்தினால் மக்களிடையே நுகர்வு தன்மை குறைந்து வருகிறது.

விளம்பரம்

இதனால் பல துறைகள் சரிவினை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் 16.88 சதவிகிதம் சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு ஜனவரியில் டிவிஎஸ் நிறுவனம் மொத்தம் 2,34,920 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2019-இல் வாகன விற்பனை 2,82,630-ஆக காணப்பட்டது. ஆக, 2020 ஜனவரியில் வாகன விற்பனை 16.88 சதவீதம் சரிந்தது.

விளம்பரம்

மதிப்பீட்டு மாதத்தில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 2,69,277-லிருந்து 18.13 சதவீதம் சரிந்து 2,20,439-ஆனது. உள்நாட்டில் இரு சக்கர வாகன விற்பனை 2,28,654 என்ற எண்ணிக்கையிலிருந்து 28.71 சதவீதம் குறைந்து 1,63,007-ஆக இருந்தது.

ஜனவரியில் மொத்த வாகன ஏற்றுமதி 52,650-லிருந்து 34 சதவீதம் அதிகரித்து 70,784-ஆனது என டிவிஎஸ் மோட்டாா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment