ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜனவரி மாதத்தில் 39.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசோக் லேலண்ட் நிறுவனம் நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் மொத்தம் 11,850 வாகனங்களை விற்பனை செய்தது.
இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் இதே கால கட்டத்தில் விற்பனையான 19,741 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 39.9 சதவீதம் குறைவாகும்.
உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 18,533-லிருந்து 41.4 சதவீதம் சரிந்து 10,850-ஆனது. நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 13,663 என்ற எண்ணிக்கையிலிருந்து 49.1 சதவீதம் வீழ்ச்சியடைந்து 6,949 ஆக இருந்தது.
இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 4,870-லிருந்து 19.8 சதவீதம் குறைந்து 3,901-ஆக காணப்பட்டது என அசோக் லேலண்ட் பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.