Categories: சினிமா

நெல்சன் வெறியா இருக்காரு.. தலைவர் 169 படம் 100% நெல்சன் படமா இருக்கும்.! தலைவர் 169 படம் குறித்து அப்டேட் வெளியிட்ட கிங்ஸ்லி

வெளியிட்டது

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது இந்த படம். இதனால் நெல்சனுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தலைவர் 169 என்ற படத்தை இயக்கவுள்ளார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைந்து நடிப்பதில் ரஜினி தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்சன் பற்றி ரெட்டிங் கிங்க்ஸ்லி ஒரு கருத்தை கூறியிருக்கிறார். தலைவர் 169 படத்தை பற்றியும் நெல்சன் பற்றியும் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நெல்சன் வெறியா இருக்காரு.. தலைவர் 169 படம் 100% நெல்சன் படமா இருக்கும்.! தலைவர் 169 படம் குறித்து அப்டேட் வெளியிட்ட கிங்ஸ்லி 1

சில நாட்களாக நெல்சன் பற்றி மீம்ஸ் வருவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம்தான். லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களுமே பிளாக் பஸ்டர். அதே போல் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால், பீஸ்ட் படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. அதிலும் குறிப்பாக நெல்சன் மிகப் பெரிய விஜய் ஃபேன். ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து இருந்தது பீஸ்ட் படம்.

இந்த தோல்வியால் ரஜினி அடுத்து நடிக்க இருக்கும் தலைவர் 169 படத்தில் நெல்சன் இயக்குனராக பணியாற்ற வைக்கலாமா? என்று ரஜினி யோசிக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ரஜினியின் சில படங்கள் தொடர்ந்து தோல்வியை கொடுத்துள்ளன. கடைசியாக நடித்த அண்ணாத்த தோல்வியில் இருந்தே இன்னும் மீண்டு வரவில்லை. ஆனால் தற்போது கிங்க்ஸ்லி, நெல்சன் குறித்து அளித்துள்ள பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் கூறும் போது நெல்சன் வெறியில் இருக்கிறார். தலைவர் 169 படத்திற்கான கதையை தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த முறை அடித்து தூக்குவார் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below Video..

Video Code Embed Credits: thi Cinemas

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்